தேர்தல் முடியும்வரை காவல்துறைக்கு விடுமுறை இல்லை – டிஜிபி உத்தரவு..!!

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை காவல்துறையில் உள்ள அதிகாரிகள் முதல் காவல்துறையினர் வரை யாருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது.

இதனையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் பணிகளில், தேர்தல் பறக்கும் படையினருடன், காவல்துறையினரும் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இதனையடுத்து, சட்டமன்ற தேர்தல் முடியும் வரை காவல்துறையில் உள்ள அதிகாரிகள் முதல் காவல்துறையினர் வரை யாருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். 

தமிழக காவல்துறையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிவதாகவும், இவர்கள் அனைவருக்கும் விடுமுறை கிடையாது என்றும், மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் விடுமுறை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே