புத்தாண்டுக் கொண்டாட்டம் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

கரோனா பரவலை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மாநிலஅரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நம் நாட்டில் கரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுப்பட்டில் வந்துள்ளது. ஆனால் பிரிட்டனில் இருந்து பரவும் புதிய வகை கரோனா வைரஸால் மீண்டும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளைமத்திய அரசு விதித்துள்ளது.எனினும், இவற்றை நடை முறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டது. 

அதில், “பிரிட்டனில் இருந்து புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. எனவே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது வைரஸ் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. ஆகவே, மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம். இதுதொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே