கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்கும் அவலம்..!!

வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உடல்கள் குவியல் குவியலாக எரிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2ஆவது அலையில் வட மாநிலங்கள் சிக்கித் திணறி வருகின்றன. டெல்லியில் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தினசரி இறப்பு அதிகமாக உள்ளதால் ஆங்காங்கே உடல்கள் எரிக்கப்படுவது பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள் கண் முன்னே கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.

பெரும்பாலான வட மாநிலங்களில் ஆக்சிஜன் வாங்குவதற்காக வாகனங்களில் மக்கள் காத்து கிடக்கின்றனர். இதனிடையே கொரோனா தடுப்பு பணிகள் குறித்து உயர்மட்ட குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே