சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு Love Propose செய்த இந்திய இளைஞர்..!! (VIDEO)

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில், பார்வையாளர் அரங்கில், இந்திய ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலிய ரசிகையிடம் மோதிரம் வழங்கி சினிமா பாணியில் தனது காதலை தெரிவித்தார்.

இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

அப்போது போட்டியை பார்க்க வந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலிய பெண்ணிடம் காதலை தெரிவிக்க, அந்த பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.

போட்டியை நேரலை ஒளிபரப்பு செய்த பாக்ஸ் கிரிக்கெட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே