ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா இருந்தால் அது கட்டுப்பாட்டு பகுதி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒரு தெருவில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் அந்த வீட்டில் தகரம் அடிக்கப்படாது என்றும் பாதிக்கப்பட்டோர் வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை தியாகராய நகரில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்திருப்பது தமிழகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே