கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

4,207 பேர் பாதிக்கப்பட்டுள்ள சென்னை ராயபுரம் மண்டலத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதியும் உள்ளது.

சேப்பாக்கம் தொகுதியின் 2 வார்டுகள், எழும்பூர் தொகுதியின் 2 வார்டும் ராயபுரம் மண்டலத்தில் அடங்கும்.

ராயபுரம் தொகுதியில் 1, 715 பேருக்கும் துறைமுகம் தொகுதியில் 1,456 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தின் 2 வார்டுகளில் 406 பேருக்கும் எழும்பூரின் 2 வார்டுகளில் 630 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர், கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மருத்துவக்குழு பரிந்துரைத்தால் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 நாள் சீரக குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள்தூள், உப்பு தலா ஒரு சிட்டிகை சேர்த்து காய்ச்சி பருகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே