“இந்தி பட வாய்ப்பு வந்தால் போட்ட டி சர்ட்டை கழட்டி விடுவார்கள்” – பிரபல காமெடி நடிகை நச் பதில்

இந்தி பட வாய்ப்பு வந்தால் டி-சர்ட்டை கழற்றிவிடுவார்கள் பிரபலங்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை ஆர்த்தி பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக இந்தி திணிப்பு சர்ச்சை எழுந்துவருகிறது. தி.மு.க. எம்.பி கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி “இந்தி தெரியவில்லையா? நீங்கள் ஒரு இந்தியரா?” என்று கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அதே போல, ஆயுஷ் அமைச்சக கூட்டத்தில், இந்தி தெரியாத மருத்துவர்கள் வெளியேறலாம் என ஆயுஷ் செயலாளர் பேசிய விவகாரம் மக்கள் மத்தியில் பூதாகரமாக கிளம்பியது.

இது ஒரு புறம் இருக்க , சமீபத்தில் வெற்றி மாறன் அளித்த பேட்டி ஒன்றில் , இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரி ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறியிருந்தார் .

இந்த நிலையில் , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 

அதனை அடுத்து, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சாந்தனு உள்ளிட்ட பலர் அதுபோன்ற டி-சர்ட்டை அணிந்து புகைப்படங்களை பதிவிட்டுவந்தனர்.

இந்த நிலையில், நடிகை ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “நம்ம தமிழ் , தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு..பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்… ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு.

அதனால பழிப்பது தவறு. விரும்பினால் படிப்போம்…

இந்தி பட வாய்ப்பு வந்தால் டி-சர்ட்டை கழற்றிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை” என்று பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே