விழுப்புரம் அருகே குடல்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

வெங்கந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று மாலை குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.

இதனை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 30 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் பெற்றோர் அங்கு குவிந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே