ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த ஜிசி முர்மு, மத்திய தலைமை கணக்காயராக நியமனம்

ஜம்மு – காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு, தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜம்மு — காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு, ஆக. 5ல், ரத்து செய்யப்பட்டது.

அதன் பின், ஜம்மு — காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை, தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

ஜம்மு — காஷ்மீரின், லெப்டினன்ட் கவர்னராக,கிரீஷ் சந்திர முர்மு, கடந்த ஆண்டு, அக்டோபர், 31ல் பதவி ஏற்றார்.

இந்நிலையில் அவர் கவர்னர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் சி.ஏ.ஜி., மத்திய தணிக்கை குழு தலைவராக ஜி.சி. முர்மு நியமிக்கப்பட்டார்.

இப்பதவியில் இருந்து வரும் ராஜிவ் மெஹ்ரிஷி, அடுத்த வாரம் பணி ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து, அந்த பதவியில், முர்மு நியமனம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே