பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் கடந்த 12-ஆம் தேதி பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் பலத்த தீக்காயத்துடன் உள்ளதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக குத்தகைக்காரர் இரண்டு பேர் உட்பட மூன்று பேர் ஏற்கனவே கைதாகி உள்ள நிலையில், தற்போது பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே