வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது – அமைச்சர் ஜெயக்குமார்

வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

முன்னாள் மேயர் சிவராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும்.

அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

செயற்குழு கூட்டத்திம் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடந்தது என தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கப்படாது, வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்பதற்காகவே வேளாண் சட்டத்தை தமிழக அரசு ஆதரித்தது.

விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே