தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ??- அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

தமிழகத்தில் முழு தளர்வில்லா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த உயரதிகார்கள் பங்கேற்க உள்ளனர்.

தற்போது, கரோனா பரவல் தடுப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். மேலும் தேவைப்பட்டால் அனைத்துக் க
கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை செய்த பின் தளர்வில்லா பொதுமுடக்கம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே