ஆக்சிஜனுக்கான கலால் வரியை ரத்து செய்வதாக பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்டக் குழு ஆலோசனையில் ஈடுபட்டது.

ஆலோசனை முடிவில், ஆக்சிஜன் தயாரிப்பு, சேமிப்பு தொடர்பான உபகரணங்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் கலால் வரி, சுகாதார செஸ் வரி உள்ளிட்டவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ஹர்ஷ் வர்தன், பியூஸ் கோயல் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே