பொதுவாக ஆண்களை விட பெண்கள் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். முக்கியமாக அழகாகவும் மென்மையாகவும் இருப்பதற்காக பல பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள்.
அழகு என்று வரும் போது, அது பெண்களுக்கு மட்டும் உரியது அல்ல, ஆண்களுக்கும் தான்.
மேலும் பெண்கள் அழகாக இருப்பதற்காக கை, கால், முகம் என உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள்.
அதில் பெண்களின் அந்தரங்க பகுதிகளும் அடங்கும்.
ஆனால் பல ஆண்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகம், தங்களின் அந்தரங்க பகுதிகளில் வளரும் முடியை நீக்கலாமா கூடாதா என்பது தான்.
அந்தரங்க பகுதிகளில் வளரும் முடியை நீக்குவதால் சுத்தமாக இருப்பதோடு மட்டுமின்றி, பல நன்மைகளும் கிட்டும்.
இக்கட்டுரையில் ஆண்கள் ஏன் கட்டாயம் அந்தரங்க பகுதியில் வளரும் முடியை நீக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சுத்தம்
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை நீக்குவதால், அந்த பகுதியில் பல நன்மைகளும் உண்டு. உடலிலேயே அந்தரங்க பகுதியில் தான் வெப்பம், வியர்வை மற்றும் பாக்டீரியா போன்றவை அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட இடத்தில் வளரும் முடியை ட்ரிம் அல்லது ஷேவிங் செய்வதால், அப்பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, அந்தரங்க பகுதி சுத்தமாக இருக்கும்.
தொற்றுக்களில் இருந்து விலகி இருக்கலாம்
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஆண்கள் ஷேவிங் அல்லது ட்ரிம்மிங் செய்வதால், தேவையற்ற நோய்த்தொற்றுக்களின் அபாயம் குறையும். மேலும் அந்தரங்க பகுதி ஆரோக்கியமாகவும் மற்றும் தேவையற்ற மருக்கள் அல்லது அரிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
உணர்திறன் அதிகரிக்கும்
அந்தரங்க பகுதியில் உள்ள முடி பலரது பாலுணர்ச்சியைப் பாதிக்கலாம். அதே சமயம் அந்தரங்க பகுதியில் வளர்ந்துள்ள முடியை நீக்கிவிடுவதால், அது துணையை ஈர்க்கலாம். இதன் விளைவாக உங்கள் துணையுடனான ரொமான்டிக் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்.
தோற்றத்தை மேம்படுத்தும்
பல ஆண்களுக்கும் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதே சமயம் தங்களின் ஆணுறுப்பும் பெரிதாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அந்தரங்க பகுதியில் உள்ள தேவையற்ற முடியை நீக்கினால், நிச்சயம் ஆணுறுப்பு பெரிதாக காட்சியளிக்கும். எனவே ஆண்களே, உங்கள் ஆணுறுப்பைச் சுற்றி வளர்ந்துள்ள முடியை நீக்க மறக்காதீர்கள்.
நினைப்பதை விட குறைந்த அளவு அபாயம்
உங்களுக்கு அந்தரங்க பகுதியில் வளரும் முடியை நீக்க விருப்பமில்லாவிட்டால், உங்கள் கவலையை கைவிடுங்கள். மேலும் அந்தரங்க பகுதியில் வளரும் முடியை நீக்க உதவும் அனைத்து வழிகளும் பாதுகாப்பானது தான். இருப்பினும் சரியான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த பகுதியில் அரிப்புக்கள், தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் கவனமாக இருங்கள்.
பேன் தொல்லை
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை அவ்வப்போது நீக்காமல் விட்டுவிட்டால், தலையில் எப்படி ஒட்டுண்ணிகளான பேன்கள் தொல்லையைக் கொடுக்கின்றனவோ, அதேப் போல் அந்தரங்க பகுதியில் வளரும் முடியிலும் பேன் தொல்லையை சந்திக்க வேண்டியிருக்கும். இத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமானால், அவ்வப்போது அந்தரங்க முடியை நீக்குவதே நல்லது.