அ.தி.மு.க.வை தொடர்ந்து இன்று தி.மு.க.வும் விருப்ப மனு அளிக்கும் தேதியை அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இதையடுத்து அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் பிப்.,24 முதல் விருப்ப மனு பெற்று அளிக்கலாம் என இன்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கும் தேதியை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க.,பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் திமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர், வரும் பிப்.17-ம் தேதி 24ம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விருப்ப மனு படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். 

இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ரூ. 1000 செலுத்தி விண்ண படிவத்தை பெற்றுள்ள கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 25 ஆயிரம், மகளிர் மற்றும் தனிதொகுதிக்கு ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தோழமை கட்சிகளுக்கான தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பத்திருந்தால் விண்ணப்ப கட்டணம் திருப்பி தரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே