தேமுதிக தலைவர் விஜயகாந்த் – டிடிவி தினகரன் சந்திப்பு..??

இன்று 11 மணியளவில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக கூட்டணி கட்சியாக இருந்த தேமுதிக, தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்காததால் அதிமுகவில் இருந்து விலக்கினார்.

இதனை தொடர்ந்து, தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கலக்கத்துடன் கூட்டணி வைக்க போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலில் விஜயாகாந்த் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று 11 மணியளவில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே