டெல்லியில் நட்சத்திர விடுதிக்கு புடவை அணிந்து சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பத்திரிகையாளரான அனிதா சவுத்ரி, டெல்லியில் ஆடம்பர உணவகம் ஒன்றிற்கு சென்றபோது, புடவை அணிந்திருந்த காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து உணவு விடுதி நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவின. ஆனால் உணவு விடுதி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.
அனிதா சவுத்ரி முன்பதிவு செய்யாமல் வந்ததால் காத்திருக்கச் சொன்னதாகவும், அவர் அதை மறுத்ததோடு தங்கள் ஊழியர்களுடன் ஒரு மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் விளக்கமளித்தது. மேலும், தங்கள் மேலாளரை அனிதா சவுத்ரி அடித்துவிட்டதாகவும் உணவக நிர்வாகம் கூறியது, ஊழியர் ஒருவர் நிலைமையை சமாளிக்க புடவை குறித்து பேசியதாகவும் விளக்கமளித்துள்ளது.