ஓர் ஆண்டிற்குள் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் – நிதின் கட்கரி

அனைத்து டோல் பிளாசாக்களும் வரும் ஆண்டில் அகற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.

மக்களவையில் இன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அனைத்து டோல் பிளாசாக்களும் வரும் ஆண்டில் அகற்றப்படும். இதனால், சுங்கச் சாவடிக் கட்டணம் அனைத்தும் ஜிபிஎஸ் முறையிலேயே வசூலிக்கப்படும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

அனைத்து டோல் பிளாசாக்களையும் ரத்து செய்யும் திட்டத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மக்கள் சாலையில் பயணிக்கும்போது மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் இதுபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.

நாங்கள் டோல் பிளாசாக்களை மூடினால், சாலை கட்டுமான நிறுவனங்கள் எங்களிடமிருந்து இழப்பீடு கோரும்.

ஆனால், அடுத்த ஆண்டுக்குள் அனைத்து டோல் பிளாசாக்களையும் அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என கட்கரி கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே