மகாராஷ்டிராவில் 40 ஆயிரத்தை கடந்த கரோனா பரவல்: தொற்று அதிகமாக உள்ள 8 மாநிலங்கள் எவை?

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 40,144 பேருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. 108 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36,902 பேரும், பஞ்சாபில் 3,122 பேரும், சத்தீஸ்கரில் 2,665 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு நிலையும் திரும்பியது. இந்தநிலையில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்ராவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அம்மாநிலத்தில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து மகாராஷ்டிராவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட காலவரையற்ற இரவு ஊரடங்கை அமல்படுத்தி மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 68,020 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாலில் 291 பேர் உயிரிழந்தனர். தற்போது நாடு முழுவதும் 35,498 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 1.2 கோடி பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2020 தொடங்கி தற்போதுவரை 1,61,843 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 84.5 சதவீதமாக உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 40,144 பேருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. 108 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ள 8 மாநிலங்கள்

மகாராஷ்டிரா: 40414

கர்நாடகா: 3,082

பஞ்சாப்: 2870

மத்தியப் பிரதேசம்: 2276

குஜராத்: 2270

கேரளா: 2216

தமிழ்நாடு: 2194

சத்தீஸ்கர்: 2153

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே