கொரோனாவால் முடக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில், பிரபலங்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

அந்த வகையில், ஹைதராபாத்தில் “மே டே” படத்தில் நடித்து வந்த பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியபட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” எனக்கு கொரோனா உறுதியானதால் நான் தனிமைபடுத்திக் கொண்டேன். உடல்நலம் நலமாக இருக்கிறது.

நான் இப்போது நன்றாக ஓய்வெடுத்தால் தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியும். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் தாங்கள் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ரசிகர்கள் அந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அண்மையில் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை தமன்னா மற்றும் நடிகர் சரத் குமாருக்கு கொரோனா உறுதியானது.

ஷூட்டிங்கில் பங்கேற்கும் பலருக்கு கொரோனா பரவி வரும் நிலையில், தற்போது புதிய வகை கொரோனா பரவுவதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரகுல் ப்ரீத் சிங் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்று வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே