தமிழ்நாட்டில் இன்று 18,023 பேருக்கு கொரோனா..; 409 பேர் உயிரிழப்பு..!!

ஏறத்தாழ 41 நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் 18,023 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி 409 போ உயிரிழந்துள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 31,045 போ விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 28,344-ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765-ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 170112 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே