அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேருக்கு இன்று கொரோனா உறுதி…!!

மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டள்ளது.

தொற்று பாதித்த அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல மாவட்டம் மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான எம்எல்ஏ மாணிக்கம் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் ஆளுநர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே