#Breaking: தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா உறுதி… 109 பேர் தொற்றால் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,609 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதிக்கபட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 3,295 பேர், பெண்கள் 2,314 பேர் ஆவர்.

இதுவரை 1,59,435 ஆண்களும், 1,03,760 பெண்களும், 27 திருநங்கைகளும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக, சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,20,985 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 109 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, தமிழகம் முழுவதும் இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,800 ஆக உள்ளது.

இதன் காரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 56,698 ஆக அதிகரித்துள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே