#JUSTIN : பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் காலமானார்!

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

பி. கண்ணன் தமிழ், மலையாள மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்து வந்தவர். இவருக்கு 69 வயது ஆகும்.

இவர் பழம்பெரும்  திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் சகோதரரும் ஆவார்.

இவர் இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர் டிக் டிக் ,அலைகள் ஓய்வதில்லை ,மண் வாசனை ,முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .

2001-ஆம்  ஆண்டில் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை வென்றுள்ளார்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் கண்ணன் வடபழனி தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே