நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி..!!

தேர்தல் பிரச்சாரத்தை நாளை துவங்க உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை முடித்த பின்னர், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார்.

ஜிபிஎஸ் பொருத்தும் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்தது. தரமான நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டும்.

இங்குதான் வாங்க வேண்டும் என நிர்பந்தப்படுத்தவில்லை.

கேஸ்விலையை குறைக்கக்கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன்.

லோக்சபா தேர்தலின் போது, இருந்த கட்சிகளுடன் கூட்டணி தொடரும். 

அதிமுகவை பொறுத்தவரை, எங்கள் கூட்டணியில் தான் பா.ஜ., தொடரும்.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தான் இன்னும் பெற்று கொள்ளவில்லை.

மத்திய அரசின் அதிகாரிகள் இன்னும் கையெழுத்திட்டு பெற்று கொள்ளவில்லை. மின்சாரத்துறை தனியார் மயம் செய்யப்படாது. போலீஸ் சம்பள உயர்வு, மின்வாரியத்தில் கேங்மேன் பணி ஆணை தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அது குறித்து பேச இயலாது.

தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால், நாளை(டிச.,19), நங்கவள்ளி, ஒன்றியத்தில் சென்றாய பெருமாள் ஆலையத்தில் வழிபாடு முடித்துவிட்டு எடப்பாடி சட்டசபை தொகுதியில் உள்ள பெரிய சோரகை பகுதியில் பிரசாரத்தை துவங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே