பீகார் முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கும் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து..!!

பீகார் முதலமைச்சராக பதவி ஏற்கும் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்ற நிலையில், நிதிஷ் குமார் இன்று மாலை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.

இங்கு, ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவை. 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது.

தற்போது, நிதிஷ்குமார் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 7-வது முறையாகவும், ஏற்கனவே 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில், பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் நான்காவது முறையாக பொறுப்பேற்றதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன், உங்களுக்கு ஒரு வெற்றிகரமான பதவிக்காலத்தை விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே