கொரோனா நோயாளிகளுக்கு காயத்ரி மந்திரம், சுவாச பயிற்சிகள் மூலம் அளிக்கும் சிகிச்சை எந்த அளவில் பலன் அளிக்கிறது என்பது குறித்து கண்டறிய இந்திய அறிவியல் அமைச்சகம் நிதி உதவி அளித்துள்ளது.

ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் மிதமான அறிகுறிகளுடன் உள்ள 20 கொரோனா நோயாளிகள் புதிய சோதனை ஒன்றில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையில் நோயாளிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஒன்று நிலையான சிகிச்சையையும், மற்றொன்று, நிலையான சிகிச்சையுடன், ஒரு யோகா பயிற்சியாளரின் மேற்பார்வையில் நோயாளிகளுக்கு 14 நாட்களுக்கு காயத்ரி மந்திரம் உச்சரித்தல் மற்றும் சுவாச பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்பட உள்ளது.

14 நாட்கள் முடிவடைந்த பின்னர் இந்த சிகிச்சை முறையால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும்; இந்த ஆய்வுக்கான ஆட்சேர்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் நிபுணரும் இணை பேராசிரியருமான டாக்டர் ருச்சி துவா தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான சிகிச்சைகள், மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்திய அறிவியல் அமைச்சகம் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான யோகா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகள் லேசான அறிகுறிகள் கொண்ட கொரோனா நோயாளிகளை குணப்படுத்துகிறது.

அதேபோல், பதஞ்சலியின் கொரோனில் போன்ற பிற ஆயுர்வேத மருந்துகளும் கொரோனாவை குணப்படுத்துகின்றன என்று கருதப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே