தமிழக அரசின் வேண்டுகோளின் படி தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் திருச்சி-செங்கல்பட்டு , மதுரை- விழுப்புரம், கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை , திருச்சி-நாகர்கோவில், கோவை- அரக்கோணம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் வேகம் எடுத்து இருப்பதை அடுத்து தமிழக அரசு சிறப்பு ரயில்கள் இயக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதனையடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் நாளை மறுநாள் (29 ம் தேதி) முதல் ஜூலை 15 ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட ரயில்களில் பயணம் செய்வதற்காக முன் பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு டிக்கெட் கட்டணம் செலுத்தப்படும்.
மேலும் சென்னை சென்ட்ரல்- டில்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.