BREAKING : தோனி ராஜினாமா? : தேர்வுக் குழு தலைவர் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருக்கக்கூடிய மகேந்திர சிங் தோனி இன்றைய தினம் மாலை ஏழு மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவிப்பதாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல்கள் பரவின.

இந்த தகவலை அடுத்து தற்போது ஹாஷ்டாக் தோனி (#Dhoni) என்பது ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. அதில் தோனி உடைய ரசிகர்கள், தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டாம், இந்த முடிவை எடுக்க வேண்டாம், தொடர்ந்து தோனி விளையாட வேண்டும் என்று அவர்கள் தோனிக்கு ஒரு வேண்டுகோளாக வைத்திருந்தார்கள்.

இந்த நிலையில் தென் ஆஃப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பை, இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழுவின் தலைவர் பிரதாப் மும்பையில் அறிவித்தார். அப்போது இது போன்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, இது தொடர்பாக உங்களிடம் தோனி ஏதேனும் தகவலை தெரிவித்தாரா?? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதாப், தோனியின் உடைய ஓய்வு தொடர்பாக தற்போது வரை எங்களுக்கு எந்த விதமான தகவலும் இல்லை , தோனியின் ஓய்வு தொடர்பாக பரவக்கூடிய செய்தி என்பது ஒரு தவறான தகவல் என்ற ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஏனென்றால், பொதுவாகவே எந்த நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு கிரிக்கெட் வீரர், அவர் ஓய்வு பெறுவதாக இருந்தாலும் அந்த முடிவினை அவர் முன்னதாகவே சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும். அதுதான் ஒரு நடைமுறையாக இருந்துவருகிறது.

2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது கூட தோனி திடீர் என்று ஓய்வு அறிவித்தார். அந்த ஓய்வு முடிவை அவர் முதலில் பிபிசியிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அந்த தகவலானது, அணி வீரர்களிடம் தெரிவித்தார்.

எனவே தோனி எப்போது ஓய்வு அறிவித்தாலும்கூட முதலில் பிபிசியிடம் தெரிவிக்க வேண்டும் அதன் அடிப்படையில்தான் பிரசாத்திடம் இந்த ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த தகவலானது, வெறும் சமூக வலைத்தளங்களில் பரவக்கூடிய தகவலாக இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடையாது.

ஏனென்றால் தோனி கடந்த 10 நாட்களாக தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவில் இருக்கிறார். 16-ஆம் தேதி தான் இந்தியா திரும்புவதாக அவருடைய நண்பர்கள் சார்பில் ஒரு தகவல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தோனியுடைய அறிவிப்பு குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளிவராத நிலையில் இந்த தகவலை பிபிசி அமைப்பு முற்றிலுமாக மறுத்து இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே