கடந்த கல்வி ஆண்டுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
10,11,12 ம் வகுப்பில் கடந்த கல்வி ஆண்டுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலும் தேர்வு எழுதலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மார்ச்-2020, ஜூன் 2020 பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தின் கீழ் எழுதலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறையானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
பழைய பாடத்திட்டத்தின் படி, 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள் அதே பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதலாம் எனவும் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.