ஊரக உள்ளாட்சி பதவிகள் ஏலம் போவது காலம் காலமாக நடப்பதுதான் – ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் என்பது காலம் காலமாக நடப்பதுதான் என்றும்; ஊடகங்கள்தான் தற்போது அதனை பெரிதுபடுத்துவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகக் கூறிய ராஜேந்திர பாலாஜி, மு.க.ஸ்டாலினிடம் உண்மை இல்லாததால் அவர் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியிலேயே முடியும் என்று கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறதா?? என்று கேட்டபோது உள்ளாட்சித் தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகள் கூட்டணியில் சிறுசிறு குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும் என்று தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சி பதவிகள் ஏலம் காலம் காலமாக நடைபெறுவதுதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே