மநீம கூட்டணியில் சமக வேட்பாளர்கள் அறிவிப்பு..; சரத்குமார், ராதிகா போட்டியிடவில்லை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கயது.

அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்துவருகின்றனர்.

திமுக, அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக உருவாகி இருக்கும் மக்கள் நீதி மய்யமும் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் 37 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சரத்குமார் இன்று வெளியிட்டார்.

இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனவும் அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சரத், ராதிகா தேர்தலில் போட்டியில்லை. 

ராதிகா வேளச்சேரியில் போட்டியிடுவார் என சரத்குமார் கடந்த மாதம் பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவோர் பட்டியல்

தூத்துக்குடி- என்.சுந்தர்
மதுரை தெற்கு – ஈஸ்வத்
விளாத்திகுளம் – வின்சன்
தென்காசி -தங்கராஜ்
ராஜபாளையம் – விவேகானந்தன்
சிவகங்கை -ஜோசப்
அம்பாசமுத்திரம் -கணேசன்
கடலூர் -ஆனந்தராஜ்
வாசுதேவநல்லூர் -சின்னசாமி
விருதுநகர் -மணிமாறன்
திருச்செங்கோடு – ஜனகராஜ்
நாங்குநேரி – சார்லஸ் ராஜா

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே