தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், கேள்வி நேரத்தில் தமிழகத்தில் விமான சேவைகள் விரிவாக்கம் குறித்து திமுக எம்பி வில்சன் எழுப்பிருந்தார்.

இதற்கு பதில் கூறிய மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் ஹர்தீப் சிங், தமிழகத்துக்கு ரூ.195 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி 5 இடங்களில் விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்கும், விமான நிலையம் புதுப்பிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, தஞ்சை, நெய்வேலி, வேலூர், சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் விமான சேவைகளை தொடர்ந்து இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 

சேலத்திற்கு ரூ.35 கோடி, தஞ்சைக்கு ரூ.50 கோடி, நெய்வேலிக்கு ரூ.30 கோடி, வேலூருக்கு ரூ.44 கோடி மற்றும் ராமநாதபுரத்துக்கு ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதில் சில விமான நிலையங்கள் தற்போது இயக்கத்தில் உள்ளன. பல இயக்கத்திலேயே இல்லை.

இயக்கத்தில் இருக்கும் விமான நிலையத்தில் கூட தேவையான வசதி இல்லை.

இதனால் தமிழகத்தில் விமான நிலையம் விரிவாக்கம், புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே