நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்யப்பட்டதையடுத்து ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயின் ‘ப்ரண்ட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயலட்சுமி, தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், இயக்குநர் சீமான் இயக்கிய ‘மகிழ்ச்சி’ என்ற படத்திலும் நடித்தார்.
இதற்கிடையே, சீமான் தன்னுடன் இரண்டு வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றிவிட்டதாக, புகார் கூறிய விஜயலட்சுமி, சீமான் பற்றிய சில வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு வந்தார்.
மேலும், அவ்வபோது சீமானை கடுமையாக விமர்சித்து வீடியோவும் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், இன்று சில மணி நேரம் முன்பு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது விஜயலட்சுமி நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சிக்கு காரணமாக சீமான் மற்றும் ஹரி நாடாரை குறிப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் கடைசியாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.