குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்..!!

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தீபாவளிப் பண்டிகையை மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன், பேரன் உள்ளிட்டோருடன் கொண்டாடியுள்ளார்.

பண்டிகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சௌந்தர்யா தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ரஜினிகாந்த் பட்டாசு வெடிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, ரஜினிகாந்த் போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் இருந்தபடியே வெளியே குவிந்திருந்த ரசிகர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே