இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார்.
80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயணித்து வந்தவர் நல்லகண்ணு (101). இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பிப்ரவரி 1ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 20 நாட்களாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலைக் குறித்து கேட்டறிந்திருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.55 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.

