அதிகளவில் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது..!!

தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் இ-பதிவு இணையதளம் முடங்கியது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது காலை 6 மணி முதல் 5 மணி வரை மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாடகை கார்களில் மூன்று பயணிகள், ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு சேவை மையங்கள் ,அலுவலகம் ,வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை இபதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் நபர்கள், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோருக்கு இபதிவு உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் புரிவோருக்கு இபதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் சுயதொழில் செய்வோர் அதிக அளவில் பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. சுயதொழில் செய்வோர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்து வருவதால் இபதிவு இணையதளம் முடங்கியது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இ பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எலக்ட்ரீசியன், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள் , வீட்டு வேலைக்கு செல்பவர்கள் அனுமதி கேட்டுள்ளனர் . சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சுயதொழில் செய்வோருக்கு இபதிவு கட்டாயம் என்பதால் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே