தமிழகத்தில் புதிதாக 1,087 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,64,450ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 421 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,582ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,45,178 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் 6,690 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


 
							