நாட்டின் பொருளாதார வளர்ச்சி (GDP) 10.5 சதவிகிதமாக உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை..!!

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

இன்று (பிப்.,05) நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் வழக்கம்போல் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும் தொடரும் என்று முடிவெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

2020 ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், 2021ஆம் ஆண்டு புதிய பொருளாதார சகாப்தத்திற்கு களம் அமைக்கப்போகிறது என அவர் தெரிவித்துள்ளார். 

4-வது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. 

தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் ரிசர்வ் வங்கி எடுக்கும்.

2021 – 2022-ல் பொருளாதார வளர்ச்சி 10.5% ஆக இருக்கும். மத்திய பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அவர், இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே