கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. தற்போது ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.

பொதுவாக ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே தொடருக்கான அட்டவணை வெளியிடப்படும். 

ஆனால், தற்போது கொரோன நெருக்கடி காலம் என்பதால் அட்டவணை காலதாமதமாகவே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் தொடர் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், 2020 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை நாளை(செப்டம்பர் 06) வெளியாகும் என ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே