கொரோனா ஆரம்பித்த நாள் முதலே வியாபாரம் குறைவாக இருந்தாலும் தங்கத்தின் விலை மட்டும் ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கிராமிற்கு 53 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையில் 424 ரூபாய் குறைந்துள்ளது. 

சனிக்கிழமையும், ஞாயிறும் விடுமுறை தினமானதால் இந்த விலையில் திங்கள் காலை வரையில் மாற்றம் இருக்காது.

நேற்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:

22 கேரட்

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4911
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39288

24 காரட்
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5157
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை .41256

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 74.90
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74900

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே