நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத வண்ணமே உள்ளது. மற்ற மாவட்டங்களில் ஓரளவு குறைந்து வரும் நிலையில் சென்னை கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

முன்கள வீரர்களும், நிவாரணம் கொடுக்கும் அரசியல் வாதிகளும் , தன்னார்வலர்களும் கொரோனாவுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுவரை 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுக்கும், சில எம்.பி களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட திமுக எம்.பி. ஞான திரவியத்திற்கு தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

அவர் தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே