தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 23) 5975 பேருக்கு கொரோனா; 97 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 97 பேர் பலியானதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,517 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தினந்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து வந்த நிலையில், இன்று உயிரிழப்பு 97ஆக பதிவாகியுள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை 2581பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர திருவள்ளூர், மதுரை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதத்தில் உயிரிழப்பு இருமடங்காக பதிவாகி வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 376 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 374 பேரும், மதுரை மாவட்டத்தில் 335 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே