போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை கிரிம்ஸ் ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அதிமுகவில் 5 அமைச்சர்கள் உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் திமுகவில் 15 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே