கொரோனாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யா குணமடைந்தனர்

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராயும் அவருடைய மகள் ஆராத்யாவும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.

கரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் முதலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். 

எனினும் பிறகு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள ஐஸ்வர்யா ராயும் அவருடைய மகள் ஆராத்யாவும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.

இத்தகவலை நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே