டெல்லி : கொரோனாவுக்கு 984 பேர் உயிரிழந்ததாக அரசு கூறிய நிலையில், 2,098 சடலங்கள் அடக்கம் என மாநகராட்சி கூறியதால் சர்ச்சை

டெல்லியில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையால் சர்ச்சை வெடித்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதோடு இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் மரணங்கள் மறைக்கப்படுவதாக சர்ச்சைகள் வெடித்துள்ளது.

டெல்லியில் கொரோனாவுக்கு 984 பேர் உயிரிழந்ததாக அரசு கூறிய நிலையில் 2,098 சடலங்கள் அடக்கம் என மாநகராட்சி கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சியின் கணக்கு படி டெல்லி தெற்கு மாநகராட்சியில் 1,080, வடக்கில் 976, கிழக்கில் 42 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசு தரப்பு எண்ணிக்கைக்கும் மாநகராட்சியின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் மாறுதல்கள் இருப்பதால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே