தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் கிரிக்கெட் விளையாடும் மக்கள் (வீடியோ)

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் தனிமை முகாமில் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான நெட்டிசன்கள் இதனை பார்த்துள்ளனர்.

அந்த வீடியோவில், தனிமை முகாமில் உள்ள சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

வேறு சிலர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டிலில் படுத்தவாறு கிரிக்கெட் விளையாடுவதை ரசிக்கின்றனர்.

இந்த வீடியோவுக்கு `இடமிருந்தால் விளையாடுங்கள், குவாரன்டைன் பொழுதை போக்குங்கள்’ என்று உமர் அப்துல்லா தலைப்பு வைத்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே