‘U’ சென்சார் ஆனது நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று!

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

ஷிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார்.

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் போஸ்டர்கள், டீசர்கள், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாறா’ தீம் மியூசிக்கை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். இந்த தீம் மீயூசிக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.

சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Related Tags :

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே