மதராசப்பட்டினம், விஜய்யின் தலைவா உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்கியவர் ஏ.எல் விஜய். அதனையடுத்து 2014ல் நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதன் பின் கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதியிருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விஜய்யின் சகோதரரான உதயா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜய்யின் குழந்தையின் அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். தற்போது அப்பாவுடன் இருக்கும் அந்த கியூட்டான குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.