தமிழகத்தில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை சீரமைக்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொருளாதர வல்லுநர்கள், தொழில்துறையினர் , யுனிசெஃப் உறுப்பினர்கள் 24 பேர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, தமிழக பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து 3 மாத காலத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, சிறு மற்றும் குறு தொழில்களில் ஏற்பட்ட தாக்கம் மற்றும், நிலைமையை சீராக்க தற்போதிருக்கும் வாய்ப்புகள் குறித்தும் இந்த நிபுணர்கள் குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.